நல்ல திறமை உள்ள கலைஞனுக்கு என்றுமே அழிவு இல்லை.... வா தலைவா... கண்களில் கண்ணீர் வந்து விட்டது... நல்ல படைப்பு நன்றி ரஹ்மான் அவர்களே
ar rahman is very good... கிராமத்து பாடலோ.. உலக அளவிளான பாடலோ மிகச்சிறப்பாக தயாரிக்ககூடிய சிறந்த AR RAHMAN
Raasa Kannu Song Lyrics in Tamil ஆண் : தந்தனா தானா… தன தந்தனா தானா… தந்தனா தானா… தன தந்தனா தானா… ஆண் : தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… —BGM— ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… —BGM— ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்… கோனி சாக்குல சுருண்ட சனம்… பஞ்சம் பசி பார்த்த சனம்… படை இருந்தும் பயந்த சனம்… ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா… அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ… ராசா கண்ணு… —BGM— ஆண் : காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா… நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா… காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா… நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா… —BGM— ஆண் : நடந்த பாதை அத்தனையிலும் ராசா… அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா… திக்குதெச தெரியலயே ராசா… அட தேடி திரியுரமே ராசா… ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா… அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா… ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்… கோனி சாக்குலா சுருண்ட சனம்… பஞ்சம் பசி பார்த்த சனம்… படை இருந்தும் பயந்த சனம்… ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா… அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா கண்ணு… ஆண் : தந்தனா தானா… தன தந்தனா தானா… தந்தனா தானா… தன தந்தனா தானா… ஆண் : தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… —BGM—
ஆழ்ந்த அழுத்தத்தை அமைதியாகவும், அழகாகவும் அர்ப்பணித்து கொடுத்த ரகுமானிற்கும், வடிவேலுவிற்கும் மற்றும் யுகபாரதிற்கும் நன்றிகள்...
இதுவரைக்கும் வடிவேல் பாடிய பாடல்களில் இந்த பாடல் மிகச் சிறந்த பாடலாக அமைந்துள்ளது......அருமை அருமை....
வாழ்க்கையின் பல வலிகளை கடந்துவந்தவர்களால் மட்டுமே இப்படிபட்ட வார்த்தைகளை எழுதமுடியும் பாடமுடியும் இசை வடிவம் கொடுக்கமுடியும். வாழ்த்துகள் மாரிசெல்வராஜ்.
எங்களின் வலிகளை உங்களின் குரலால் வெளி படுத்திவிட்டீர்கள் வடிவேலு என்னும் பன்முக கலைஞரே நன்றி...
பாடல் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது சமீபத்தில் ஏ. ஆர்.ரஹ்மானின் சிறந்த பாடல்
என்ன வரி, இசை, பாடியது வடிவேலுக்கு இப்படி ஒரு குரல் இருக்கா ,அழுகை இப்பவே வருதே ,கண்களை மூடி அமைதியாக இது வரை 30 தடவை கேட்டுவிட்டேன் ,நன்றி மாரி அண்ணா
படையிருந்தும் பயந்த சனம்.. கண்ணீர் அடக்க முடியவில்லை தாழ்த்தபட்ட மக்களின் வலி
A.R.ரஹ்மான் அவர்கள் இசையில் நல்ல பாடகர்கள் மிகவும் உயர்ந்த பாடலை படைப்பார்கள். 👏👏👏
படையிருந்தும் பயந்த சனம்.....எத்தனை வலி,எத்தனை ஏக்கம்,எத்தனை ஆழம், எத்தனை அடக்குமுறை, எத்தனை வரலாறு எல்லாத்தையும் ஒத்த வரில முடிச்சிட்டாப்ல.....யுகபாரதி யுகத்தின் கவிஞன்❤
மனதை ஆட்கொண்ட பாடல், வடிவேலு ஐயாவாக அடுத்த நிலைக்கு உயர்ந்து விட்டார், நன்றி ரகுமான், நன்றி மாரி செல்வராஜ். நன்றி.
உணர்ச்சிகரமான வரிகளுடன் இதயத்தை நடுங்க வைக்கும் பாடல். நன்றி ARR மற்றும் YB
வடிவேலு ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பாடகரும் கூட என்பது இப்போதுதான் தெரிந்தது... ஏ.ஆர். ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
வலி நிறைந்த வரிகள்... பல கிராமங்களின் வலிகள் நிறைந்த மொழிகள்... அருமையான படைப்பு... ரஹ்மான் சார்... வடிவேலு சார் மற்றும் மாரிசெல்வராஜ் அண்ணா 💞
கண்ணோடு ஒரு தூளி நீர் வழிகிறது உன் குரலில் வடிவேல் உன் இசையில் AR ரஹ்மான் உன் இயக்கத்தில் மாரி செல்வராஜ்❤
பல வலிகளை எளிமையாக உணர்த்தும் இயல்பான குரல்... வடிவேலு அவர்கள் இது போன்ற பல கிராமத்து பாடல்கள் பாட வேண்டும்....
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வெல்ல துடிக்கும் மாமன்னன் மாபெரும் வெற்றி ❤
@CinemaTicketTamil