ஓம் சரவணபவ
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். இந்தக் கோவிலின் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் 'ஓம்' என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்திருப்பதை அறிய முடியும். இந்த ஆலயத்தில் தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன் படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன் படுத்தப்படுகின்றது.
இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருக்கும். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.
コメント