காலத்தே குழந்தைப்பேறு கிடைக்க அம்மன் வழிபாடு!
இறைவி : ஸ்ரீ முத்துமாரியம்மன்
தலம் : தாயமங்கலம்
கோயிலுக்குச் செல்லும் வழி:-
தாயமங்கலம்
முத்துமாரியம்மன் கோவில்
GPS:- 9.6827,78.6004
காயத்ரி மந்திரம்:-
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மாரி ப்ரசோதயாத்!
பீஜாட்சர மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஐம்
ஸ்ரீ முத்துமாரியம்மையை நமஓம்!
Arulmigu Muthumariamman Temple Thayamangalam
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தாயமங்கலம்
https://maps.app.goo.gl/zSe7ANy5xFKAk...
தல வரலாறு:-
300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் தங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். மதுரையில் தனது வேலை முடித்துத் திரும்புமுன் தவறாது மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவது அவரது வழக்கமாய் இருந்தது. அவர் செல்வந்தராய் இருந்தும் அவருக்கு மக்கட்பேறு கிட்டவில்லை.
முத்துச்செட்டியார் ஒரு நாள் மதுரையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது சின்னமன்னூரில் ஒரு பெண் குழந்தை யாரும் அருகில் இல்லாமல் தனியே அழுது கொண்டிருக்கக் கண்டார். அழுது கொண்டிருந்த குழந்தையை வாரியணைத்துக் கொண்டவர் அருகில் யாரும் அக்குழந்தைக்குரியவராகக் காணப்படாததால் அன்னை மீனாட்சித் தன் மேல் இரக்கம் கொண்டு அக்குழந்தையைத் தனக்காகவே அனுப்பியுள்ளதாக எண்ணித் தானே கூட்டிக் கொண்டுபோய் வளர்க்க எண்ணினார்.
குழந்தையைக் கூட்டிக் கொண்டு வரும் வழியில் ஒரு ஆற்றைக் கண்டவர் ஆற்றின் கரையில் குழந்தையை இருக்கச் செய்து விட்டு குளிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கினார். குளித்து முடித்து திரும்பி வந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. சுற்றுமுற்றும் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் தாளாத துயருடன் வீடு சென்றவர் தன் மனைவியிடம் நடந்த விவரத்தைக் கூறி வருந்தினார். துயரத்தினால் உண்ணாமல் உறங்கிக்கொண்டிருந்த அவரது கனவில் அக்குழந்தை வந்து தான் கள்ளிக்காட்டில் உறைவதாகவும் அவ்விடத்தில் தனக்கு சிலை செய்து வைத்து வணங்கும்படியும் தெரிவித்தது. குழந்தையைத் தோளில் சுமந்து சென்றபோது அக்குழந்தை அவரிடம் அவர் பெயருடன் அம்மன் பெயரையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னதால் அம்மனுக்கு "முத்துமாரி" என பெயரிடப்பட்டது. அக்குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆற்று மணலைக் கொண்டு அம்மன் சிலை செய்யப்பட்டு கூரை வேயப்பட்ட ஒரு சிறு கோவிலுக்குள் வைத்து வணங்கப்பட்டது.
பரிகாரம்:-
இந்த அம்மனை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
நேத்திக்கடன்:-
தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு, கண்மலர் வைத்து வழிபடுவர்.
ஆன்மீக ஜோதிடர், ஜாதகம், வாஸ்து,
எண் கணித நிபுணர், பூஜைகள்
சிவதிரு.சிவமணிசுவாமிகள்
☎️ : 96593 20245 📱 : 98426 79941
#6, R V. நகர், S.R.K.V போஸ்ட்,
பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர் - 641020
GPS Coordinates : 11.1511,76.9385
Mobile : 96593 20245, Whatsapp : 98426 79941
GPS Link :
https://goo.gl/maps/ahcCyPP2uZhn6bz68
#வழிபாடுசூட்சுமம்
#வழிபாடு #சூட்சுமம்
#swamitv
#swami
#வழிபாடுசூட்சுமங்கள்
#வழிபாடு
#சூட்சுமங்கள்
#சூட்சுமவழிபாடு
#காயத்ரிமந்திரம்
#பீஜாட்சரமந்திரம்
#மந்திரம்
#திருக்கோயில்
#அம்மன்கோயில்
#அம்மன்கோவில்
#தமிழ்நாடு
#இந்தியா
#india
#Temple
#TamilNadu
#ஆலயம்
#அருள்மிகு
#தாயமங்கலம்
#முத்துமாரியம்மன்கோவில்
#ArulmiguMuthumariammanTemple
#Thayamangalam
#அருள்மிகுமுத்துமாரியம்மன்திருக்கோயில் #தாயமங்கலம்
#Thayamangalam
#TamilNadu
#630709
コメント